தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்து - இளம் குடும்பஸ்தர் பலி
கிளிநொச்சியில் இன்று (29) இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் புது குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக( பட்டா)வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பொழுது அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர் தியாகராசா சஞ்சீவன் 36 வயதுடைய தருமபுரம் பகுதியைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிழந்துள்ளார்
விபத்துக்கான காரணம்
அதிக மது போதையில் பயணித்தாலே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
