கோவிலுக்கு சென்ற 19 வயது இளைஞனுக்கு நடந்த அவலம்!
Sri Lanka Police
Accident
By pavan
மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆனைக்கட்டியவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஆலயம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேலையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 35 ஆம் கொலனி பக்கியல்ல பகுதியை சேர்ந்த சச்சி என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை

அதேவேளை, அதே பகுதியை சேர்ந்த 23 வயது இன்னொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 19 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி