மட்டக்களப்பில் வாகன விபத்து - மற்றொரு நபர் உயிரிழப்பு!
Sri Lanka
Accident
By pavan
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி, புனாணை எனும் இடத்தில் கடந்த வியாழக்கிழமை (24) ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் ஓட்டமாவடி நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் ஸ்தலத்திலேயே 25 வயதான எஸ்.எச்.எம்.அஸாம் எனும் பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.
சிகிச்சை பலனின்றி

இதனையடுத்து, விபத்தில் படுகாயமடைந்த மற்ற இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய புஹார்தீன் நுஸைக் அஹமட் என்பவர் ஆவார்.