வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் பலி
வவுனியா நகரப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் வவுனியா நகர பள்ளிவாசலின் முன்பாக இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஏ9 வீதியில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக கோவில்குளம் நோக்கி சென்ற பாரவூர்தி, நகர பள்ளிவாசல் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த போது, நகரப் பகுதியில் இருந்து வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் வவுனியா, நெடுக்குளம் பகுதியைச் சேர்ந்த கும்புகேகெதர முத்துபண்டா (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |