வவுனியாவில் கோர விபத்து - மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Vavuniya
Accident
By pavan
வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (17) இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
காவல்துறை விசாரணை

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவும் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களிற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக ஈரற்பெரியகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி