புகையிரத விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி
முல்லைத்தீவு மாங்குளம் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டி - அக்கராயன் பிரதான வீதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், முழங்காவில் பகுதியைச் சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய, 02 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கிப் பயணித்த குறித்த நபர், தரித்திருந்த டிப்பர் வாகனத்தை கடந்து புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது புகையிரதம் அவரை மோதியுள்ளது.
இதனால், படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட புகையிரத திணைக்கள காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பாக அருகில் உள்ள வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
