யாழ் - பருத்தித்துறை வீதியில் விபத்து..! மாநகர சபை உறுப்பினர் படுகாயம்
Jaffna
Accident
By Vanan
1 மாதம் முன்
யாழ் - பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சட்டத்தரணியும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான மு.றெமீடியஸ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியின் குறுக்கே திடீரென வந்த நாய் ஒன்றுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து இடம்பெற்ற சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் மு.றெமீடியஸ் பலத்த காயத்திற்கு இலக்காகியுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள றெமீடியஸ், அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்