பாதாள உலக தலைவன் 'ககனவின் ' சகா கைது!
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரரான 'ககன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ஹோமாகம பகுதியிலுள்ள ஹைலெவல் வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
ககனவின் உதவியாளர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஆவார்.

வெளிநாட்டில் தங்கியிருக்கும் 'ககன'வின் நேரடி வழிகாட்டலின் கீழ், இச்சந்தேகநபர் நீண்டகாலமாக மிகவும் இரகசியமான முறையில் இலங்கையில் போதைப்பொருள் விநியோகக் கட்டமைப்பை நடத்தி வந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஹோமாகம காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |