நாட்டில் குவியும் சடலங்கள்! திணறும் அரசாங்கம் - இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

Corona Death SriLanka Nimal Lansa
By Chanakyan Aug 15, 2021 10:37 AM GMT
Report

ராகமை வைத்தியசாலையில் கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத நிலைமையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்காமல் 48 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் அங்குள்ள பிரேத அறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

 இவற்றில் 28 சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவற்றை வெகுவிரைவில் அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

சடலங்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்காக உள்ளுராட்சி உறுப்பினர்கள் , பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்தத் தெரிவிக்கையில், 

கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத 48 சடலங்கள் இறுதி கிரிகைகள் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்களை வைப்பதற்கான இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும்.

எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக குறித்த சடலங்களுக்கான இறுதிகிரியைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 28 சடலங்கள் மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்திலும் , ராகமை தலகொல்ல பொது மயானத்திலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள சடலங்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்புபிரினரின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் சில தினங்களுக்குள் முன்னெடுக்கப்படும்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொறுப்பேற்கவுள்ள உறவினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை, கம்பஹா மாவட்டத்திலிருந்து வெளியேறுதல், உறவினர்களை இனங்காண முடியாமை உள்ளிட்ட காரணிகளால் ஏற்பட்ட தாமதங்களை தவிர்த்து, உறவினர்களுடன் துரிதமாக தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த சடலங்களை முறையாக தாமதமின்றி தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி, மாவட்ட அபிவிருத்தி குழு, குறித்த பிரதேச அபிவிருத்தி குழு என்பவற்றின் ஊடாக சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசண்ண ரணதுங்கவின் ஆலோசனைக்கமைய அரசியல் அதிகாரிகள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஆகியோரும் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி