கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மக்கள் எதிர்ப்பால் முறியடிப்பு
யாழ். வடமராட்சி கிழக்கில் காணிகளை சிறிலங்கா கடற்படைக்கு சுவீகரிக்கும் நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் உள்ள J/433 முள்ளியான் கிராம சேவகர் பிரிவில் உள்ள கட்டைக்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காணியின் ஒருபகுதியில் கடற்படையின் காவலரண் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அளவிடும் நடவடிக்கை

இந்தப் பகுதியில் காணி சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்வதற்கு சென்ற நில அளவை திணைக்களத்தினருக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதனையடுத்து நில அளவைத் திணைக்களத்தினர் காணி அளவிடும் நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.