இராஜதந்திர ரீதியில் செயற்படவும் - அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சியிடமும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
srilankan crisis
bar association
By Kanna
நாட்டின் நெருக்கடியை அறிந்து அவசியமான நேரங்களில் இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடமும், எதிர்க்கட்சியிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இதேவேளை, நெருக்கடி நிலைக்கு ஜனநாயக ரீதியில், அரசியல் அமைப்புக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தமது நாட்டு அரசாங்க நிதியின் பொறுப்பாளர்கள் என்றும், அந்தப் பொறுப்பிலிருந்து தாங்கள் விலக முடியாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என்றும் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி