பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு பதவி கால நீடிப்பு: கிடைத்தது ஒப்புதல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Department Of Audit
By Dilakshan
பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவுக்கு கூடுதலாக ஆறு மாத கால பதவி நீடிப்பு வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியலமைப்பு சபை நேற்று (22) நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது.
குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் முன்மொழிவு
முன்னதாக, எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் இயக்குநரான எச். பி. டி. சந்தனாவின் பெயரை கணக்காய்வாளர் நாயகப் பதவிக்கு ஜனாதிபதி முன்மொழிந்திருந்தார்.
எனினும், அரசியலமைப்பு சபை பெரும்பான்மை வாக்குகளால் அந்த முன்மொழிவை நிராகரித்தது.
இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக மூன்று வாக்குகளும் எதிராக ஐந்து வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்