பதவியேற்ற கையோடு பதில் அதிபர் சென்ற இடம் (படங்கள்)
Sri Lanka Army
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Sumithiran
இராணுவ வைத்தியசாலைக்கு சென்ற பதில் அதிபர்
பத்தரமுல்ல நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது காயமடைந்த இராணுவ வீரர்களின் நலம் விசாரிப்பதற்காக பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க இன்று இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
அங்கு அவர் காயமடைந்த இராணுவத்தினருடன் சுமுகமான சந்திப்பில் ஈடுபட்டார்.
இராணுவத் தளபதியும் பங்கேற்பு
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
