தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்த சங்கு உறுப்பினர் - பறந்த அதிரடி உத்தரவு

Jaffna Ilankai Tamil Arasu Kachchi Current Political Scenario
By Thulsi Jun 19, 2025 10:08 AM GMT
Report

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்குபிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட மா.குமார் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், இன்று நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவின் போது கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் எதிர்த்து வாக்களித்துள்ளீர்கள்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜெயந்தன் தெரிவு

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜெயந்தன் தெரிவு

உறுப்பினர் பதவியில் நீக்கம்

ஆகையால் உடனடியாக நடைமுறைக்கு வரும்படியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீங்கள் இடை நிறுத்தப்படுகின்றீர்கள். தங்களது இந்த நடவடிக்கை சம்பந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்த சங்கு உறுப்பினர் - பறந்த அதிரடி உத்தரவு | Action Against Dtan Member

இல்லையெனில் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள்  என்றுள்ளது.

இன்று இடம்பெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவின்போது தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) சார்பில் சண்முகநாதன் ஜெயந்தனும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் தர்மலிங்கம் சுப்பிரமணியம் நந்தகுமாரும் முன்மொழியப்பட்டனர்.

கெஹெலியவின் மகள்கள் இருவர் உட்பட மருமகனும் கைது..!

கெஹெலியவின் மகள்கள் இருவர் உட்பட மருமகனும் கைது..!

அதனை மாற்ற முடியாது

இதன்போது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் மா.குமார், தமிழரசுக் கட்சியின் தவிசாளர் வேட்பாளரான சண்முகநாதன் ஜெயந்தனுக்கு வாக்களித்திருந்தார்.

 தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்த சங்கு உறுப்பினர் - பறந்த அதிரடி உத்தரவு | Action Against Dtan Member

பின்னர் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் சென்று தான் தவறுதலாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்து விட்டதாகவும் தனது வாக்கை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினருக்கு மாற்றுமாறும் கோரினார்.

எனினும் குறித்த வாக்கு பதியப்பட்டுவிட்டதாகவும் அதனை மாற்ற முடியாது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தெரிவித்தார்.

இதேவேளை உப தவிசாளர் தெரிவின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினருக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தொடருந்து பயணிகளுக்கு நற்செய்தி

வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தொடருந்து பயணிகளுக்கு நற்செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025