ஓய்வுபெற்ற படையினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை! ரணில் உறுதி
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) உறுதியளித்துள்ளார்
பத்தரமுல்ல (Battaramulla) அக்குரேகொட, பாதுகாப்பு அமைச்சு வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைமையக வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்விலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறப்பு செயற்திட்டம்
இது தொடர்பில் அதிபர் மேலும் தெரிவிக்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இதுவரை பொருத்தமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
அதன் காரணமாக இராணுவத்தினர் ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது.
எனவே அதனைக் கருத்திற் கொண்டு, ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கான சிறப்பு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரணவிரு சேவை அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |