இம்ரான் கான் விவகாரம் - பாகிஸ்தான் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு!
பாகிஸ்தானில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டதையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதிரடி உத்தரவு
அவரது பாகிஸ்தான் Tehreek-e-Insaaf கட்சி நாடு பூராகவும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகரில் ஒன்றுகூடவுள்ளதாக அறிவித்திருக்கிறது.
இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதால் பாகிஸ்தானில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையானர்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிரான அவரது மனுவை உயர்நீதிமன்றம் விசாரணை செய்கிறது.
இதேவேளை, அவரைக் கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தானிய உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
