போராட்டகாரர்கள் கைது -ஜேர்மனியில் வாழும் இலங்கையர் எடுத்த நடவடிக்கை
ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள்
ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள் 'ஐரோப்பாவில் உள்ள இலங்கையர்கள்' என்ற அமைப்பின் சார்பில் இன்று (09) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் கிர்ஸ்டன் லூக்கிற்கும், சோசலிச மற்றும் ஜனநாயக ஒற்றுமை முன்னணியின் துணைத் தலைவர் கப்ரியேலா பிஷோப்பிற்கும் இடையில் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியான பேர்லினில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
அரசியல் காரணங்களுக்காக போராட்டக்காரர்கள் கைது
அரசியல் காரணங்களுக்காக போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும், எதிர் அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், ஊழல் அரசியல்வாதிகள் இலங்கையை எப்படி வங்குரோத்தாக்கினார்கள் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் தேர்தலை நடத்துமாறு கோரி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஊடாக பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
‘ஐரோப்பாவில் உள்ள இலங்கையர்கள்’ என்ற அமைப்பின் சார்பில் மொஹமட் ரிஸ்மி, கலாநிதி சிசிர விதானச்சி, சட்டத்தரணி அச்சல குமாரசிறி, பிரேமச்சந்திர கொடித்துவக்கு ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

