அரச அதிகாரிகள் மீது எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை..!
நாட்டில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 70 அரச அதிகாரிகள் அந்த பதவிகளில் பணியாற்றுவதற்குத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், குறித்த அதிகாரிகளை உடனடியாக பதவிகளில் இருந்து நீக்குவதற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதற்கு முன்னரும் பல அதிகாரிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த முறைகேடான அதிகாரிகள் இனங்காணப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து நிர்வாகப் பணிகளுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
