விரைவில் சிக்கப்போகும் அர்ஜுன மகேந்திரன் : அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) மீண்டும் விசாரணைக்கு அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நேற்று (26) அமைச்சரவைக்குப் பின்னரான ஊடக சந்திப்பில் உரையாற்றிய போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதில் அதிகாரிகள் சில சட்ட சிக்கல்களை எதிர்கொள்வதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடத்த அரசாங்கம்
அவரை இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறிய அவர், அவருக்கு எதிரான வழக்கு தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார்.
சிங்கப்பூரில் (Singapore) ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்து அர்ஜுன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) முன்னர் நாடாளுமன்றத்தில் கூறியதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அர்ஜுன மகேந்திரன் திரும்பி வருவதை உறுதி செய்வது முன்னாள் ஜனாதிபதியின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடைபெற்று இந்த பெப்ரவரி மாதம் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 22 மணி நேரம் முன்
