மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன (Prasanna Gunasena) தெரிவித்துள்ளார்.
பிரசன்ன குணசேன தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஒளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
கடந்த வியாழக்கிழமை (04) எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின் பின்புறத்தில் பேருந்து மோதி, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியை உடைத்து சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
32 பேர் பயணித்த இந்த பேருந்தில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 13 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
