இந்திய நடிகரை குறி வைத்து துப்பாக்கிச் சூடு:மூன்று சந்தேக நபர்கள் கைது
பொலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து நேற்று (18) பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மும்பையின் ஜூஹு பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டைகர் ஷெராஃப் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும், அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாகன சாரதிக்கு காயம்
இருப்பினும், இந்தச் சம்பவத்தின்போது அவரது வாகன சாரதி மற்றும் ஒரு முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானின் கோட்டா ரயில் நிலையத்தில் ரயிலில் பயணித்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரிகளில் இருவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
அவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடையவர்கள். இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து டைகர் ஷெராஃபின் நலம் விசாரிப்பதற்காக மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |