விஜயகாந்தின் உடல் நிலை: வெளியான புகைப்படம்
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்த் உடல்நல பின்னடைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து பல்வேறு மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இணையத்தில் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.