இறுகும் போதைப்பொருள் விவகாரம்: கைதான நடிகர்களுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இருவரும் பிணை கோரி மனு அளித்திருந்த நிலையில் இந்த மனு போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வாதம்
ஸ்ரீகாந்த் தரப்பில் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கும், வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என வாதிடப்பட்டது. கிருஷ்ணா தரப்பில், மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இருவருக்கும் பிணை வழங்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
