இலங்கை வரும் அமெரிக்க கப்பல் - உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பு

Jaffna Trincomalee United States of America Sri Lanka Navy
By Rakesh Feb 21, 2026 03:23 AM GMT
Report

இலங்கைக்கு (Sri lanka) வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் இன்று சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்படவுள்ளதாக அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர் தெரிவித்தார்.

அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி Steve Koehler (அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கோலர்) 2026 பெப்ரவரி 19 முதல் 21 வரை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ் சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்

யாழ் சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்

உடனடி மனிதாபிமான உதவி

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு அபிவிருத்திகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக மீளாய்வு செய்தனர்.

இலங்கை வரும் அமெரிக்க கப்பல் - உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பு | Us Pacific Fleet Commander Admiral Koehlers

குறிப்பாக, 'டித்வா' சூறாவளி அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளைப் பிரதி அமைச்சர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.

அமெரிக்க விமானப்படையின் 36-வது அவசரக்கால பதிலளிப்பு குழுவின் ஊடாக, இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்கள் மற்றும் விமானப்படை வீரர்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து வசதிகள், இலங்கையின் மீட்புப் பணிகளுக்குப் பெரும் பக்கபலமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய அவசர நிலைகளை ஒரு திருப்புமுனையாகக் கொண்டு, சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி - மரணச் சடங்கிற்கு வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம்

மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி - மரணச் சடங்கிற்கு வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம்

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கை

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கை வரும் அமெரிக்க கப்பல் - உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பு | Us Pacific Fleet Commander Admiral Koehlers

இதன்போது, அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நான்கு கடலோர பாதுகாப்பு கப்பல்கள், பீச்கிராப்ட் கிங் எயார் விமானம், அதிநவீன 'பிளீட் பிராட்பேண்ட்' (FleetBroadband) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் 10 பெல் TH-57 பயிற்சி ஹெலிகள் ஆகியவற்றின் பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார்.

இதற்குப் பதிலளித்த அட்மிரல் கோஹ்லர், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் இன்று சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

இறுதியாக, இந்தோ -பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்ளும் போது, நாடுகளின் இறையாண்மையை மதிப்பதே மிக முக்கியமானது என்பது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட அட்மிரல் கோஹ்லர், 2024 ஏப்ரல் 4 அன்று அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் அவர் தலைமைத்துவம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி...! வலுக்கும் கண்டனம்

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி...! வலுக்கும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening

ReeCha
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026