பேலியகொடையில் பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
Sri Lanka Police Investigation
Crime
Sri Lanka Customs
Drugs
By Pavi
பேலியகொடையிலுள்ள பயணிகள் சுயாதீனப் பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து பல மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருட்கள் இன்று (26) கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கப்பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த திடீர் சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு குறித்த களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 3 பொதிகளில் 18.193 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம்
இதன்பெறுமதி 181.93 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்த தாக்குதல்களை அங்கீகரித்து மன்னிப்பு கோரவேண்டும்! சிறிலங்காவின் போர்க்கால முகத்திரையை கிழித்த ஐ.நா
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி