பாகிஸ்தானில் புதிய மாகாணங்களை உருவாக்கும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு
பாகிஸ்தானில் தற்போது நடைமுறையிலுள்ள நான்கு மாகாணங்களுக்குப் பதிலாக 12 மாகாணங்களை உருவாக்கும் யோசனை மீண்டும் அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த முன்மொழிவு நாட்டில் ஏற்கனவே நிலவும் அரசியல் மற்றும் இனரீதியான பிளவுகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்கு இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆதரவு வழங்குவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி ஆசிப் அலி
இதன் ஊடாக ஷெரீப் மற்றும் சர்தாரி குடும்பங்களின் தலைமையிலான பிரதான அரசியல் கட்சிகளின் செல்வாக்கைக் குறைத்து, நாட்டின் அரசியலில் இராணுவத்தின் ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் காணப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோர் இந்த யோசனைக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, நவாஸ் ஷெரீப் இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுப்பதைத் தாமதப்படுத்தும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் அரசியலமைப்பின் 239ஆவது சரத்தின் கீழ், மாகாண எல்லைகளை மாற்றியமைப்பதற்கு கடுமையான அரசியலமைப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக, சிந்து மாகாணத்திற்குள் புதிய மாகாணங்களை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டால் வன்முறைகளும் அரசியல் ஸ்திரமின்மையும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பஷ்தூன், பலூச், சிந்தி மற்றும் பஞ்சாபி இனக் குழுக்களிடையே ஏற்கனவே நிலவும் முரண்பாடுகளுக்கு மத்தியில், மாகாண எல்லைகளை மறுசீரமைப்பது மேலும் அரசியல் நெருக்கடிகளையும் சமூகப் பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே, தற்போதைய அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற சூழலில் இத்தகைய நிர்வாக மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவது பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையாக அமையலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இறுதி யுத்த தாக்குதல்களை அங்கீகரித்து மன்னிப்பு கோரவேண்டும்! சிறிலங்காவின் போர்க்கால முகத்திரையை கிழித்த ஐ.நா
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |