இலங்கையின் பழமையான இரு துப்பாக்கிகளை மீள வழங்க நெதர்லாந்து முடிவு
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்குச் சொந்தமான இரண்டு பழமையான துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் ஒப்படைக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்தத் துப்பாக்கிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலுள்ள தேசிய அருங்காட்சியகமான Rijksmuseum இல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
குறித்த துப்பாக்கிகள் இலங்கைக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அருங்காட்சியக ஆய்வாளர்களும் இலங்கை ஆய்வாளர்களும் இணைந்து நீண்டகால ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு பழங்காலத் துப்பாக்கிக
18ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தத் துப்பாக்கிகள், 1765ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களுக்கும் கண்டி இராச்சியத்திற்கும் இடையில் இடம்பெற்ற போரின்போது கைப்பற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதற்கு முன்னரும், 2023ஆம் ஆண்டு இலங்கைக்குச் சொந்தமான இரண்டு பழங்காலத் துப்பாக்கிகளை நெதர்லாந்து மீள ஒப்படைத்திருந்தது.
தற்போது மீளக் கையளிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ள இரண்டு துப்பாக்கிகளும், முன்னர் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளைப் போன்றே பாரிய அளவிலானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் ஒரு துப்பாக்கியில் கண்டி இராச்சியத்தின் அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்று மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் இந்தத் தொல்பொருட்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |