யாழ். நெல்லியடியில் தமிழரசுக் கட்சியினரால் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்
யாழ்ப்பாணம் - நெல்லியடியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (25.11.2026) இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது மாவீரர்களின் தந்தை ஒருவரால் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம், பொதுச் செயலாளர் சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தல்
நினைவாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பொதுமக்கள் பார்வையிட்டதுடன், மாவீரர்களின் உருவப்படங்களை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் மரக்கன்றுகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |