யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்றைய தினம் யாழில் கொண்டாடப்பட்டுள்ளது.
யாழ். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக வீடு இருந்த காணிக்குள் கொண்டாட்ட கேக் வெட்டி பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதேவேளை , விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டது.
பூர்வீக வீடு அமைந்துள்ள காணி
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாளை மறைந்த அரசியல் தலைவர் எம்.கே சிவாஜிலிங்கம் முன்னெடுத்து வந்திருந்தார்.

அதேவேளை , வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்துள்ள குறித்த காணியின் மதிலில் அவர் வாழ்ந்த இல்லம் என பதாகையும் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் கட்டப்பட்டிருந்த பதாகை கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்ட நிலையில் புதிய பதாகை கட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |