ஹம்பாந்தோட்டைக்கு அருகே இயந்திரக் கோளாறுக்குள்ளான சரக்குக் கப்பல் மீட்பு
ஹம்பாந்தோட்டைக்கு அப்பால் சுமார் 12 கடல் மைல் தொலைவில் இயந்திரக் கோளாறுக்குள்ளான சைப்ரஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல், பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
159.99 மீற்றர் நீளமான MV AAL Gibraltar என்ற குறித்த கப்பலில் சுமார் 23,000 மெற்றிக் தொன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.
நான்கு மீட்புப் படகுகளின் உதவியுடன் கப்பல் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம்
வணிகக் கப்பல் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) மற்றும் துறைமுக அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கப்பலின் இயந்திரக் கோளாறைச் சீரமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஏனைய வசதிகளை ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வழங்கியுள்ளதுடன், திருத்தப் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நாமலுக்கு எதிரான சட்ட நடைமுறை : அனுரவுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் : கம்மன்பில எச்சரிக்கை
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில