ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு அமைய, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை மனுவொன்றை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு சற்று முன்னர் வருகை தந்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில், இன்று (25) ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானம் அறிவிக்கவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கும்படி அவர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
சிங்கப்பூரில் சிகிச்சை
மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, கோட்டாபய ராஜபக்சவின் சட்டக் குழுவினர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வழக்கின் தீர்மானத்தை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

அந்தநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில