வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச திணைக்களங்களால் மக்களின் காணிகள் அதிகளவில் கையகப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றால் பொதுமக்களின் காணிகள் அதிகளவில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான சுமார் 5 இலட்சத்து 98 ஆயிரம் ஏக்கரில், 4 இலட்சத்து 32 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வனவளத் திணைக்கள கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளதாக அவர் புள்ளிவிபரங்களுடன் தெரிவித்துள்ளார்.
மக்களின் பயன்பாட்டில் இருந்த காணிகள் மற்றும் சிறுதானியப் பயிர்ச்செய்கை நிலங்களைத் திணைக்களங்கள் கையகப்படுத்தி வைத்துள்ளதால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், இந்தக் காணிகளின் அளவு குறித்து அரசாங்கத்திடம் உரிய மற்றும் திருப்திகரமான பதில் இல்லை எனவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |