சந்திவெளியில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு
மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் வடக்கு - கிழக்கு முழுதும் இடம்பெற்று வரும் நிலையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (25.11.2026) மட்டக்களப்பு - சந்திவெளியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் நாதஸ்வர மேளத்துடன் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலரஞ்சலி செலுத்தி அஞ்சலியும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளித்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஸ்ரீநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாக்கியச்செல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள்மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.








| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |