வளைகுடாவில் தொடரும் பதற்றம்: ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரானின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஈரான் அனுமதிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெய்ரோவிலுள்ள ஈரானிய நலன்கள் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் மொஜ்தபா பெர்டோசிபூர் (Mojtaba Ferdowsipour) இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகடொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில
ஈரானின் விதிமுறைகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அமெரிக்கத் தடைகளால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைப்பதற்கு ரஷ்யா மற்றும் சீனாவுடனான வர்த்தகம் ஈரானுக்கு உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடாப் பகுதிகளில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் கடற்படை முற்றுகைக்குப் பதிலடியாக ஈரானின் விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் ஐந்து எண்ணெய் கப்பல்கள் கடற்கண்ணிகளில் மோதித் தீப்பற்றியுள்ளதாக ஈரான் ஆயுதப் படை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் அமெரிக்க முற்றுகை ஈரானின் பொருளாதாரத்தைக் கடுமையாக நெருக்கி வரும் நிலையில் இந்த முற்றுகையை உடைப்பதற்கான நகர்வுகளால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாரிய மோதல் வெடிப்பது தவிர்க்க முடியாதது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |