மட்டக்களப்பில் கொடூரம் : மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் : வெளியான காரணம்
புதிய இணைப்பு
கணவர் வேலைக்கு சென்று வரும் நிலையில் உயிரிழந்த அவரது மனைவி வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ள நிலையில் அங்கு அவளின் உறவினரான இளைஞன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதனையறிந்த கணவர் குறித்த இளைஞனை தனது வீட்டுக்கு வரக்கூடாது என தெரிவித்து கண்டித்துள்ள நிலையில் சம்பவ தினமான நேற்று (24) காலையில் மனைவியிடம் இந்த தகாத உறவு தொடர்பாக கேட்டபோது கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து பெண்ணின் கணவர் காவல் அவசர தொலைபேசி எண் 119 இலக்கத்துக்கு அறிவித்துவிட்டு காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதனை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்ததுடன் சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்தவரை நீதிமன்றில் இன்று (25) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல் இணைப்பு
மட்டக்களப்பு, வாகரை, கதிரவெளி பகுதியில் பெண்ணொருவர் கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கணவன் மற்றும் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதையடுத்து கணவன் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவன் கைது
23 வயதான பெண்ணே இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

மேலும் பெண்ணின் கணவரான 26 வயதுடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாகரை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில