வெள்ளத்தில் மூழ்கிய A9 வீதி வழமைக்கு திரும்பியது - வளிமண்டலவியல் எச்சரிக்கை
பெய்த கடும் மழையால் அக்குறணை பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய A9 பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.
கடும் மழை காரணமாக அக்குறணை நகரின் பல வீதிகளும் நேற்று (25.11.2026) நீரில் மூழ்கியதால், அப்பகுதிகளில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கண்டி - பேராதனை - பெனிதெனிய வீதி, உடுநுவர - தவுலகல மற்றும் யாலேகொட ஆகிய வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
வளிமண்டலவியல் திணைக்களம்
நாளை (26) வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நாமலுக்கு எதிரான சட்ட நடைமுறை : அனுரவுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் : கம்மன்பில எச்சரிக்கை
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு