கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறப்பு
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, விநாடிக்கு 4,200 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் பெய்யும் மழையின் அளவு மற்றும் நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்து திறக்கப்படும் வான் கதவுகளின் எண்ணிக்கை மேலும் மாற்றியமைக்கப்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களம்
இதனால், நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் தெதுரு ஓயாவின் இரு கரைகளையும் அண்மித்துப் வசிக்கும் மக்கள் நீர்மட்டம் அதிகரிப்பது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்படுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |