சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலே சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) முன்னாள் செயலாளரான அசாத் மௌலான ஆகிய இருவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஹுங்கல்லாவில் உள்ள தனியார் ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்து இருவரும் தங்கியிருந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான சுரேஷ் சலே இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட 300 பக்கங்களுக்கும் அதிகமான அறிக்கையில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்
எந்தவித சித்திரவதையும் செய்யப்படவில்லை
இந்நிலையில் அறை முன்பதிவுகள் தொடர்பான கடன் அட்டைத் தகவல் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், துவான் சுரேஷ் சலே மீது தற்போதைய விசாரணையில் எந்தவித சித்திரவதையும் செய்யப்படவில்லை என ஐந்து பேர் கொண்ட நிபுணர் மருத்துவக் குழுவின் அறிக்கையும் வெளிப்படுத்தியுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |