யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை விதிப்பு
யாழில் கணவனை அடித்துக் கொன்ற மனைவிக்கு இன்று புதன்கிழமை யாழ் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி, அரியாலை - பூம்புகார் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய செல்வகுமார் என்பவர் திருவலைக் கட்டையால் தலையில் அடித்துக் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
எதிராளிக்கு மரணதண்டனை
குறித்த சம்பவம் தொடர்பில் மனைவியும் மற்றும் ஒரு நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், பிரதிவாதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன்,எதிராளிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மற்றயவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |