நன்றி தெரிவிக்கும் தினம்: இன்றுமுதல் இரு நாட்களுக்கு உலகெங்கும் அமெரிக்கத் தூதரகங்கள் மூடல்
அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி தெரிவிக்கும் தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விசா சேவைகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான உதவிகள் உள்ளிட்ட வழக்கமான தூதரகப் பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தூதரகங்கள் நவம்பர் 28ஆம் திகதி மீண்டும் திறக்கப்படலாம் எனவும், உலகளாவிய ரீதியில் வழக்கமான சேவைகள் நவம்பர் 30ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
இதற்கிடையில், அவசர நிலைமைகளின்போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், பயணிகள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு உள்ளூர் ஊடகங்கள் வாயிலாக நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நாமலுக்கு எதிரான சட்ட நடைமுறை : அனுரவுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் : கம்மன்பில எச்சரிக்கை
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு