பிரித்தானியாவின் இரகசிய ஒப்பந்தம்! ஆப்பிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு

Sri Lanka United Kingdom
By Pavi Nov 25, 2026 11:03 PM GMT
Report

பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட இலங்கைப் பிரஜை, பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத இரகசிய ஒப்பந்தமொன்றின் கீழேயே நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய அரசாங்கத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத எஸ்வத்தினி நாட்டிற்கே குறித்த நபர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான மனநலப் பாதிப்பால் பீடிக்கப்பட்டிருந்தவரும், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டவருமான 35 வயதான கிஷாந்த் பெரமாலியா என்ற குறித்த நபர், எஸ்வத்தினி நாட்டிற்கு அனுப்பப்பட்டு சில மாதங்களின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறப்பு

கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறப்பு

அகதி பாதுகாப்பு 

அவர் உயிரிழக்கும் போதும், அவரை அந்நாட்டில் நிரந்தரமாகக் குடியேற்றுவது தொடர்பான திட்டங்களைப் பிரித்தானிய அரசாங்கம் இறுதி செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் இரகசிய ஒப்பந்தம்! ஆப்பிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு | Sri Lankan Deported To Eswatini Commits Death

பிரித்தானிய அரசாங்கத்தினால் அகதியொருவர் இவ்வாறு பலவந்தமாக வேறொரு நாட்டில் நிரந்தரமாகக் குடியேற்றப்படுவதற்காக அனுப்பப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனக் குறிப்பிடப்படுகிறது.

2021-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து கனடா நோக்கி கடல் மார்க்கமாகப் பயணித்துக் கொண்டிருந்த போது, பிரித்தானிய அரச கடற்படையினரால் இந்து சமுத்திரத்தில் வைத்து பெரமாலியா உள்ளிட்ட இலங்கை அகதிகள் குழுவொன்று மீட்கப்பட்டது.

பின்னர் அவர்கள் பிரித்தானிய - அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ள 'டியேகோ கார்சியா' (Diego Garcia) தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீண்டும் இலங்கைக்குச் செல்வதற்குப் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய அதிகாரிகள், அவர்களுக்கு அகதிப் பாதுகாப்பு வழங்கிய போதிலும், மூன்று வருடங்களாக அவர்களை அத்தீவில் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாகப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இளமைப் பருவத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகளினால் சித்திரவதைக்குஉள்ளானதாகவும், அதன் காரணமாகத் தான் கடுமையான உளவியல் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதற்கெடுத்தாலும் விடுதலை புலிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தானா இலக்கு..!

எதற்கெடுத்தாலும் விடுதலை புலிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தானா இலக்கு..!

பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதி

டியேகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது மனநிலை மேலும் மோசமடைந்திருந்ததுடன், அவர் பல தடவைகள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் இரகசிய ஒப்பந்தம்! ஆப்பிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு | Sri Lankan Deported To Eswatini Commits Death

அக்காலப்பகுதியில் தாக்குதல் நடத்தியமை, தீ வைத்தமை மற்றும் நான்கு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

2024 டிசம்பர் மாதத்தில் அத்தீவிலிருந்த பெரும்பாலான இலங்கை அகதிகளுக்குப் பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்ட போதிலும், பெரமாலியாவின் குற்றப் பதிவுகள் காரணமாகப் பிரித்தானிய அமைச்சர்கள் அவரைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டனர்.

பின்னர் 2026 பெப்ரவரி மாதத்தில் ஈரானுடனான போருக்காக அமெரிக்கா டியேகோ கார்சியா தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த தேவையற்ற நபர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய மார்ச் மாத இறுதியில் 30 நாட்கள் காலப்பகுதிக்கு மாலைத்தீவிற்கு அனுப்பப்பட்ட அவர், அதன் பின்னர் ஆப்பிரிக்காவின் எஸ்வத்தினி நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உலகின் தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் குற்றவாளிகளையும் கொட்டும் குப்பைத் தொட்டியாக ஆப்பிரிக்காவைப் பிரித்தானியா பயன்படுத்துவதாக எஸ்வத்தினி நாட்டின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர், பிரித்தானியப் பொதுமக்களின் பாதுகாப்பே தமது முன்னுரிமை எனவும், பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டுக் குற்றவாளிகள் பிரித்தானியாவிற்குள் நுழைவதைத் தடுப்பதற்குத் தேவையான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026