எதற்கெடுத்தாலும் விடுதலை புலிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தானா இலக்கு..!
வெளிநாடுகளில் வாழும் இலங்கையரின் இரண்டாம் தலைமுறைக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவுள்ளதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது அரசாங்கத்தின் அறிவிப்பு இதற்கும் விடுதலை புலிகளுக்கும் என்னய்யா சம்பந்தம்.
தமிழில் ஒரு பழமொழி உள்ளது ாமட்டந் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சு போடுவது என்று அதுதானோ இது என்று தெரியவில்லை.
தென்னிலங்கையில் ஏதாவது ஒன்று நடந்து விட்டால் உடனே புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது அல்லது விடுதலை புலிகளுக்கு சார்பாக செயற்படுகிறது என இனவாத ரீதியாக கத்தும் உதய கம்மன்பில மற்றும் சரத்வீரசேகர ஆகியோர் உள்ளனர்.
யுத்தம் முடிந்து இன்று 17 வருடங்கள் கடந்து விட்டன.அதன்பிறகு சிறிய துப்பாக்கிசூட்டு சத்தம் ஏதாவது வடக்கு கிழக்கில் கேட்டதா?
ஆனால் வடக்கு கிழக்கில் மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை, மேய்ச்சல் தரைகளுக்கு சென்றால் துப்பாக்கிசூடு நடத்தி கால்நடைகள் கொல்லப்படுகின்றன.காணிகள் பிடிப்பு வேகமாக நடக்கின்றன.
இதையெல்லாம் கதைக்க தென்னிலங்கையில் ஆக்களில்லை விடுதலை புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்தான் உறுத்துகின்றார்கள்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள் அதுதான் தென்னிலங்கையில் நடைபெறுகிறது.
இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வளவு வசதி வாய்ப்புகளுடன் உள்ளனர். உண்மையில் நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் அவர்களுடன் பேசி முதலீடுகளை இங்கு வரவழைத்து இங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வறுமை நிலையை போக்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலாம் அல்லவா?
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நாடு ஆனால் ரின்மீன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாக சொல்வார்கள்.
வசதியும் வாய்ப்பும் நாட்டில் உள்ளபோது இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை நாம் உருவாக்குவதை விடுத்து வௌிநாடுகளில் ஒப்பந்தம் செய்கிறோம் இலங்கையரை வேலைக்கு அனுப்ப
இதில் தமது அரசியலை செய்ய விடுதலை புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்.
இலங்கையில் ஸ்திர நிலை ஏற்பட தமிழரும் சம நிலைக்கு வரும் வரை அல்லது அவர்களது உரிமைகள் வழங்கப்படும்வரை தென்னிலங்கையில் இவ்வாறான புராணங்கள் ஓயாது.
அதுவரை நாடும் முன்னேறாது என்பதுவே நிதர்சனம்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |