மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு 281 புதிய உத்தியோகத்தர்கள் நியமனம்

Government Employee Government Of Sri Lanka Central Environment Authority
By Sathangani Nov 26, 2026 04:02 AM GMT
Report

இலங்கையின் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு களப்பணியை மேலும் வினைத்திறனாக்கும் நோக்கில் 281 புதிய சுற்றாடல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (25) சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிறுவன ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சைகளில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இரகசிய ஒப்பந்தம்: பிரித்தானியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை ஏதிலி..! உயிரைமாய்த்துக் கொண்ட சோகம்

இரகசிய ஒப்பந்தம்: பிரித்தானியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை ஏதிலி..! உயிரைமாய்த்துக் கொண்ட சோகம்

சுற்றாடல் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு

இவர்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமைக் காரியாலயம், மாகாணக் காரியாலயங்கள் மற்றும் மாவட்டக் காரியாலயங்களுக்கு இணைக்கப்படவுள்ளனர்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு 281 புதிய உத்தியோகத்தர்கள் நியமனம் | Cea Recruits 281 New Environmental Officers

நீண்ட காலத்திற்குப் பின்னர் இவ்வாறு ஒரே தடவையில் பெருமளவிலான சுற்றாடல் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு இறுதியாக 2017ஆம் ஆண்டிலேயே சுற்றாடல் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன், இதற்கு முன்னர் இவ்வாறானதொரு பெருமளவிலான உத்தியோகத்தர்கள் குழு 1997ஆம் ஆண்டிலேயே ஒரே தடவையில் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தது.

ஓடிக்கொண்டிருந்த கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு

ஓடிக்கொண்டிருந்த கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு

தேசிய சுற்றாடல் சட்டம் 

இலங்கையின் பிரதான சுற்றாடல் ஒழுங்குபடுத்தல் நிறுவனமான மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது, சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் ஆகிய பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு 281 புதிய உத்தியோகத்தர்கள் நியமனம் | Cea Recruits 281 New Environmental Officers

தேசிய சுற்றாடல் சட்டம் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சுற்றாடல் சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை மேலும் முறையாகவும் வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மனித வளத்தைப் பெற்றுக்கொள்வதே இந்த ஆட்சேர்ப்புகளின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில், சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திலக் ஹேவாவசம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

யாழ். மக்களே அவதானம்..! இலங்கையின் பல மாகாணங்களுக்கு பலத்த மழை குறித்து எச்சரிக்கை

யாழ். மக்களே அவதானம்..! இலங்கையின் பல மாகாணங்களுக்கு பலத்த மழை குறித்து எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026