இரகசிய ஒப்பந்தம்: பிரித்தானியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை ஏதிலி..! உயிரைமாய்த்துக் கொண்ட சோகம்
பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடான எஸ்வத்தினிக்கு நாடுகடத்தப்பட்ட 35 வயதான இலங்கைப் பிரஜை கிஷாந்த் பெரமாலியா, கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி உயிரைமாய்த்துக்கொண்டுள்ளார் செய்து கொண்டுள்ளார்.
அவரை எஸ்வத்தினிக்கு நாடுகடத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம் அந்நாட்டுடன் இரகசிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தமை விடயம் தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அவரை அந்நாட்டில் மீள்குடியேற்றுவதற்கான செலவுகளை மூன்று ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்ள பிரித்தானியா இணங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய அரசாங்கம்
கடுமையான மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த பெரமாலியா, எஸ்வத்தினியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளானதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் குழுவில் ஒருவரான அவர், டியேகோ கார்சியா தீவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவரது குற்றப் பின்னணி காரணமாக பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதலில் மாலைதீவுக்கும் பின்னர் எஸ்வத்தினிக்கும் அனுப்பப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் மீது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |