ஈரான் அணுகுண்டை வீசினால் தப்புமா இஸ்ரேல்..! அபாயத்தின் உச்சத்தில் மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் எந்தவேளையிலும் பாரிய போர் ஒன்று வெடிக்கலாம் என்ற நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் அணுவாயுத தாக்குதலை நடத்தலாமா என்ற கேள்வியை சில இராணுவ வல்லுனர்கள் எழுப்புவதை காண முடிகிறது.
அவ்வாறு ஒரு அணுவாயுத தாக்குதலை ஈரான் மேற்கொண்டால் 290 மைல் நீளத்தையும் 09 மைல் அகலத்தையுமே கொண்ட இஸ்ரேலுக்கு என்ன நடக்கும்
இஸ்ரேலில் உள்ள மக்கள் மத்தியில் மாத்திரமல்ல உலகிலுள்ள முக்கிய ஆய்வாளர்கள் மத்தியிலும் அச்சத்துடன் கேட்கப்படும் கேள்வி இதுதான்
ஈரானின் கரங்களுக்கு அணுவாயுதம் வந்தசேரும் ஒரு நிலை உருவானால் இஸ்ரேல் மீது அணுவாயுத தாக்குதலை மேற்கொள்ளும் என்றே பலரும் நம்புகின்றனர்.
இது தொடர்பில் ஈரானும் பல தடவைகள் பகிரங்கமாகவே கூறியுள்ளது. இதேவேளை ஈரானிடம் 440 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளமை அனைவருக்கும் தெரியும்.
ஏற்கனவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கொண்டு இரண்டு வாரங்களில் அணுவாயுதத்தை தயாரித்து விட முடியும் என்பதுவும் அனைவருக்கும் தெரியும்.
ஒரு அணுகுண்டை தயாரிப்பதற்கு வெறும் 42 கிலோ கிராம் யுரேனியம் போதுமானது என கூறப்படும் நிலையில் ஈரானிடம் உள்ள 440 கிலோ கிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கொண்டு 10 அணுகுண்டுகளை தயாரிக்க முடியும் என்கிறார்கள் போரியல் வல்லுனர்கள்
இந்த பின்னணியில் ஈரான், இஸ்ரேல் மீது அணுவாயுத தாக்குதலை மேற்கொண்டால் என்ன நடக்கும் என கேள்வி எழுப்புகின்றனர் போரியல் வல்லுனர்கள் அந்த கேள்விக்கான பதிலை வழங்குகிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |