நீதிமன்றில் முன்னிலையாகாத சத்தாரத்ன தேரருக்கு பிடியாணை
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Arrest
By Sindu
இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளது.
சமூக ஊடகங்களில் மத நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதவான் பாசன் அமரசேன, அவரது பிணைதாரர்களுக்கு அறிவிப்புகளை அனுப்புமாறும் உத்தரவிட்டார்.
சிஐடியின் மனு
குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) சமர்ப்பித்த மனுக்களைத் தொடர்ந்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இவர் பௌத்த பிக்குகள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி