ஈஸ்டர் தாக்குதல்! கோட்டாபயவைக் கைது செய்வதற்கான கிடைத்துள்ளன ஆதாரங்கள்

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Suresh Salley
By Dharu Nov 26, 2026 07:27 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் கோட்டாபய ராஜபக்சவை சந்தேகநபராக பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இதன்படி அவரது கைது குறித்து, விசாரணை அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்க கோரி அவர் முன்வைத்த மனுவும் நேற்று நிராகரிக்கப்பட்டது.

சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை

சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை

விசாரணைகளுக்கு பாரிய பாதிப்பு

இந்த பின்னணியிலேயே சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட அறிக்கை மேற்கண்ட விடயத்தை மையப்படுத்தியுள்ளது. கோட்டாபய ராஜபக்ச இன்னும் சந்தேக நபராகப் பெயரிடப்படாததால், அவரை மீண்டும் வழக்கில் சேர்ப்பதை உறுதிசெய்ய ஒரு வழிமுறை இருந்தாலன்றி, பயணத் தடையை நீக்குவது விசாரணைகளுக்கு பாரிய பாதிப்பை உருவாக்கும் என சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்! கோட்டாபயவைக் கைது செய்வதற்கான கிடைத்துள்ளன ஆதாரங்கள் | Evidence Been Obtained For The Arrest Of Gotabaya

270-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியான மிகவும் உணர்வுப்பூர்வமான வழக்கு இது என்பதை நினைவுப்படுத்திய நீதிமன்றம் எந்த வகையிலும் இந்த விசாரணைக்கு தடைகள் உருவாகக்கூடாது என நேற்றைய விசாரணையில் தெரிவித்துள்ளது.

அவரது கைதுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால், இந்த வழக்கில் நீதவான் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் சுரேஷ் சால குறித்த முக்கிய விசாரணை அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னதா சலே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட வேளையில், கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்கள் நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டன. அந்த உத்தரவால் பீதியடைந்த ராஜபக்சக்களும், அவர்களது சகாக்களும், எதிர்க்கட்சிகளும், தொடர்ச்சியான பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட பிரசாரங்களைத் தொடங்கினர்.

கோட்டை தொடருந்து நிலையத்தின் முன்பும் தொடர்ச்சியான சத்தியாகிரகம் தொடங்கப்பட்டதுடன், சானி அபேசேகரரின் சித்திரவதைக் கூடத்தில் சுரேஷ் சாலே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக அவர்களால் கூறப்பட்டது.

இந்தப் பிரசாரத்தில் சலேயின் மனைவி, மகன் மற்றும் மூத்த சகோதரரும் பயன்படுத்தப்பட்டனர். சித்திரவதையின் காரணமாக சலே உயிரை மாய்க்கும் எண்ணத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பிரசாரகர்கள் கூறியிருந்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்

சலேவுக்குச் சொந்தமான ஒரு சிம் கார்ட்

எனினும் சலே தொடர்பில் மருத்துவ குழுவின் 311 பக்க அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் சலே தனது கைது காரணமாக எந்த மனநோயாலும் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்! கோட்டாபயவைக் கைது செய்வதற்கான கிடைத்துள்ளன ஆதாரங்கள் | Evidence Been Obtained For The Arrest Of Gotabaya

இந்த விசாரணையில் சலே மீது நீதிமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சஹ்ரான் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக ஒரு தகவல் அளிப்பவர் அரச புலனாய்வு சேவைக்கு (SIS) தகவல் அளித்திருந்ததாகவும், ஆனால் அந்தத் தகவல் கோப்பை சுரேஷ் சலே மறைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவுக்குச் சொந்தமான ஒரு சிம் கார்ட், கப்பல் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதைக்கொண்டு அவர் மௌலானாவுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சிம் கார்ட்கள், உளவுத்துறையால் செய்யப்படும் குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் குறித்த தகவல்களை பெறுவதற்கு நீதிமன்ற உத்தரவு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் "இத்தகைய சிம் கார்ட்கள் வீரச் செயல்களுக்காக அல்ல, குற்றச் செயல்களுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன," என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026