வவுணதீவில் வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்: மூவர் கைது
மட்டக்களப்பு, வவுணதீவு - வாழைக்காலை பகுதியில் கோபு தலைமையிலான வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலைக் கண்டித்தும், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனுக்கு நீதி கோரியும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது நேற்று (25.11.2026) இடம்பெற்றுள்ளது.
வவுணதீவு வீதி சுற்றுவட்டத்தில் காலை 10 மணியளவில் ஒன்றுகூடிய மக்கள், வாள்வெட்டுக் குழுவின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துமாறு கோஷங்களை எழுப்பியவாறு காவல் நிலையம் வரை பேரணியாகச் சென்றனர்.
சட்ட நடவடிக்கை
இதன்போது, குறித்த குழுவின் வன்முறைகள், கசிப்பு விற்பனை மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்த காவல் நிலையப் பொறுப்பதிகாரி, சம்பவத்துடன் தொடர்புடைய வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குழுவின் தலைவர் கோபு தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதனையடுத்து, வாள்வெட்டுக் குழுவின் செயற்பாடுகளை முற்றாகக் கட்டுப்படுத்துமாறு கோரி மகஜர் ஒன்றையும் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நாமலுக்கு எதிரான சட்ட நடைமுறை : அனுரவுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் : கம்மன்பில எச்சரிக்கை
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு