பிணையில் வெளியே வந்தார் நடிகை தமிதா!
Sri Lanka
SL Protest
Sri Lankan political crisis
By pavan
கோட்டா கோ கம போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டைநீதிமன்ற நீதவான் திலின கமகே இன்று (12) இந்த உத்தரவிட்டார்.
கோட்டா கோ கம போராட்டத்தில் பங்கேற்ற தமிதா அபேரத்வை பிணையில் விடுவித்த அதேவேளை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நடிகை தமிதா
தமித்தா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
கொழும்பு அதிபர் செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான குற்றச்சாட்டில் தமித்தா அபேரத்ன கடந்த மாதம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி