சஜித்தின் தலைமைக்கு ஆப்பு - விரைவில் மாற்றம் எனும் டயனா கமகே
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரைவில் தலைமைத்துவ மாற்றத்திற்கான போராட்டத்தைத் தொடங்குவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.
இதனால் கட்சி வெற்றிப் பாதையில் செல்லும் என்றும் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்;டு குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்துக்கு சென்று திரும்பும் போதே அவர் இந்த கருத்தை நேற்று வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற முடியாது
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியினர் (UNP), தங்கள் தலைவர் ரணில்விக்ரமசிங்கவை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
விக்ரமசிங்க தலைவராக இருக்கும் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கூறி, தலைமைத்துவ மாற்றத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இன்று அதேநிலையே ஐக்கிய மக்கள் சக்திக்கும் நடக்கும் என்று டயனா கமகே தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
